தேசியம்
செய்திகள்

காசாவில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உரையாடல்

காசாவில் மூன்று கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் உரையாடியுள்ளதாக கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

காசாவில் மூன்று கனடியர்கள் இஸ்ரேலிய படையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக உறவினர் அண்மையில் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கனடியர்கள் Ahmed Elagha, அவரது இரண்டு புதல்வர்கள் சோதனை நடவடிக்கையில் அழைத்துச் செல்லப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பொதுமக்கள் விவகாரங்களில் பாலஸ்தீனியர்களுடன் ஒருங்கிணைக்கும் COGAT இஸ்ரேலிய நிறுவனத்துடனும் தனது அமைச்சு உரையாடியுள்ளதாக அமைச்சர் Mélanie Joly கூறினார்.

காசா பகுதியில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே உறுதிப்படுத்தியது.

இவர்களது குடும்பத்திற்கு தூதரக உதவியை வழங்குவதாகவும் வெளிவிவகார அமைச்சு  தெரிவித்தது.

Related posts

கடந்த ஆண்டு Ontario வீதிகளில் 350க்கும் அதிகமான மரணங்கள்

Lankathas Pathmanathan

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்ப வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment