தேசியம்
செய்திகள்

காசாவில் மூன்று கனடியர்கள் கடத்தல்?

காசாவில் மூன்று கனடியர்கள் இஸ்ரேலிய படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாக உறவினர் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை இரவில் நடத்தப்பட்ட சோதனையின் போது காசா பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது

காசா பகுதியில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே உறுதிப்படுத்தியது.

இவர்களது குடும்பத்திற்கு தூதரக உதவியை வழங்குவதாகவும் வெளிவிவகார அமைச்சு  தெரிவித்தது.

ஆனால் தனியுரிமை காரணமாக காணாமல் போன கனடிய பிரஜைகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனாலும் கனடாவில் பிறந்த Ahmed Alagha, அமெரிக்காவில் பிறந்த அவரது இரண்டு புதல்வர்களான 18 வயதான Borak Alagha , 20 வயதான Hashem Alagha ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டவர்கள் என உறவினர்கள்  கூறுகின்றனர்.

இவர்கள் மூவரும் 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் காசாவுக்கு சென்றனர் எனவும் கூறப்படுகிறது.

இவர்கள் மூவரும் கனடிய குடியுரிமை கொண்டவர்கள் எனவும், அவர்கள் வியாழன்  அதிகாலை இஸ்ரேலியப் படைகளால் கடத்தப்பட்டதாகவும் உறவினர்கள் கூறினர்.

இவர்களுடன் வசித்து வந்த கனடிய குடியுரிமை கொண்ட  மூன்று இளைய குழந்தைகள், கனடிய நிரந்தர குடியுரிமை கொண்ட அவர்களின் தாயார் கைது செய்யப்படவில்லை

இந்த சம்பவம் குறித்த கனடிய அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையை உறவினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

Related posts

கடந்த ஆண்டு Ontario வீதிகளில் 350க்கும் அதிகமான மரணங்கள்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட கனடா தயாராக உள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment