தேசியம்
செய்திகள்

Bell ஊடக வலைய பணி நீக்கங்கள் குறித்து பிரதமர் அதிருப்தி

Bell ஊடக வலைய பணி நீக்கங்கள் குறித்து பிரதமர் Justin Trudeau அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தமது நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் 4,800 தொழில்கள் குறைக்கப்படும் என Bell தலைமை நிர்வாகி Mirko Bibic வியாழக்கிழமை (08) தெரிவித்திருந்தார்.

Bell ஊடக வலையமைப்பு அதன் 103 பிராந்திய வானொலி நிலையங்களில் 45 வானொலி நிலையங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

Bell துணை நிறுவனத்தில் பத்திரிக்கையாளர்கள், பிற தொழிலாளர்கள் உட்பட அதன் ஒன்பது சதவீத பணியாளர்களை அது குறைக்கிறது.

Bell ஊடக வலையமைப்பின் இந்த முடிவு குறித்து தான் கோபமடைந்துள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்

Bell ஊடக வலையமைப்பின் வருமானம் முந்தைய ஆண்டை விட 2023ல் $140 மில்லியன் குறைந்துள்ளதாக Bell தலைமை நிர்வாகி கூறியிருந்தார்.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்கள் வார இறுதிக்குள் வெளியேற்ற முடிவு!

Lankathas Pathmanathan

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Lankathas Pathmanathan

Leave a Comment