February 23, 2025
தேசியம்
செய்திகள்

காசாவில் மற்றொரு கனடிய பிரஜை காணாமல் போயுள்ளார்!

காசா பகுதியில் மற்றொரு கனடிய பிரஜை காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.

இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் இரண்டு இளம் வயது அமெரிக்க சகோதரர்களும் அவர்களது கனடிய தந்தையையும் கைதாகியுள்ளதாக Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், இராணுவம் உடனடியாக கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

காசா பகுதியில் கனடியர் காணாமல் போயுள்ளது குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

இவரது குடும்பத்திற்கு தூதரக உதவியை வழங்குவதாகவும் வெளிவிவகார அமைச்சு  தெரிவித்தது.

ஆனால் தனியுரிமை காரணமாக காணாமல் போன கனடிய பிரஜை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

சர்வதேச மாணவர்கள் குறித்த அறிவித்தலை வெளியிடும் குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec

Lankathas Pathmanathan

David Johnston பதவி விலகவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment