British Colombia மாகாண NDP அமைச்சரவையில் இருந்து Selina Robinson விலகுகிறார்.
இஸ்ரேல் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து Selina Robinson இந்த முடிவை எடுத்துள்ளார்.
Selina Robinson அமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக, மாகாண முதல்வர் David Eby திங்கட்கிழமை (05) உறுதிப்படுத்தினார்.
“Selina Robinson முன்வைத்த கருத்துக்கள் தவறானவை” எனவும் முதல்வர் கூறினார்.
Coquitlam-Maillardville தொகுதியை 2013ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்திய அவர் முன்னர் மாகாண நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
அவர் தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிப்பார்
இஸ்ரேல் அமைந்திருக்கும் பிராந்தியத்தை “crappy piece of land” என விவரித்ததன் மூலம் பரவலாக எதிர்ப்பை அவர் எதிர் கொண்டிருந்தார்.
பாலஸ்தீனிய ஆதரவு குழுக்கள் உட்பட பலரிடம் இருந்து அவரது பதவி விலகல் கோரிக்கைகள் அதிகரித்தன.