கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என புதிய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கனடிய புள்ளி விவர திணைக்களம் வெள்ளிக்கிழமை (02) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
கனடிய புள்ளி விவர திணைக்களம் 1982 முதல் 2017 வரை கனடாவில் குடியேறியவர்களின் குடியேற்றத்தை ஆய்வு செய்தது.
கனடாவுக்கு குடியேறியவர்களில் 15 சதவீதத்துக்கும் அதிகமானோர் 20 ஆண்டுகளுக்குள் கனடாவை விட்டு தங்கள் நாடு திரும்ப அல்லது வேறு நாட்டிற்கு குடியேற முடிவு செய்கிறார்கள் என இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
சில புலம்பெயர்ந்தோர் சில சமயங்களில் கனடாவை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தாலும், புலம்பெயர்ந்தோர் கனேடிய தொழிலாளர் சந்தை அல்லது சமூகத்துடன் ஒருங்கிணைவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் குடியேறியவர்கள் கனடாவை விட்டு வெளியேறியவர்களை விட, சமீபத்தில் குடியேறியவர்கள் அதிகளவில் கனடாவை விட்டு வெளியேறுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.