கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு வலையமைப்புகள் ‘ஆழமாக உட்பொதிந்துள்ளன’ என கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (Canadian Security Intelligence Service – CSIS) அறிக்கை தெரிவிக்கின்றது.
வெளிநாட்டு குறுக்கீடுகள் கனடிய அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் செயல்படுகின்றன என CSIS புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
வெளிநாட்டு தலையீடு கனடாவின் ஜனநாயகத்தை அதிகளவில் பலவீனப்படுத்துகிறது எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
பிரதமர் Justin Trudeau அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட விசாரணை ஒன்று கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்தது.
கனடாவின் 2019, 2021 பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகளை இது ஆராய்கிறது.