அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்கா – கனடா எல்லை பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துகின்றனர்.
“நாங்கள் வடக்கு எல்லை குறித்து போதுமான அளவு பேசவில்லை” என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் ஐ.நா தூதருமான Nikki Haley அண்மையில் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ளவர்கள் உடனான தொடர்புகள் Mexico எல்லையில் குறைந்து வருவதாகவும் ஆனால் கனடிய எல்லையில் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்
பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள, 500 பேர் வடக்கு எல்லை வழியாக அமெரிக்கா வந்துள்ளனர் எனவும் Nikki Haley தெரிவித்தார்.
பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள 484 நபர்கள் 2023 இல் அமெரிக்கா – கனடா எல்லையில் கைது செய்யப்பட்டனர் என அமெரிக்க சுங்கம், எல்லை பாதுகாப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதே பட்டியலில் உள்ள 80 பேர் அமெரிக்கா – Mexico எல்லையில் கைது செய்யப்பட்டனர்
முன்னணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான Donald Trump, அமெரிக்கா – கனடா எல்லை பாதுகாப்பு குறித்து இந்த மாதம் கருத்து தெரிவித்திருந்தார்.
Donald Trumpக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் Florida ஆளுநர் Ron DeSantis, விவேக் ராமசாமி ஆகியோர் தமது பிரச்சாரங்களில் கனடா – அமெரிக்கா எல்லை பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (21) ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய Florida ஆளுநர் Ron DeSantis வடக்கு எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பிரச்சாரம் செய்தார்.
அமெரிக்க எல்லையை கடக்கும் fentanylலின் அதிகரிப்பதை காரணம் காட்டி, கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சுவர் கட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி உறுதியளித்திருந்தார்.