தேசியம்
செய்திகள்

Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள்: Pierre Poilievre

Quebec மாகாணத்தின் இரண்டு பெரிய நகரங்களின் நகர முதல்வர்கள் குறித்த குற்றச்சாட்டுகளை  Conservative கட்சி தலைவர் முன்வைத்துள்ளார்.

Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள் என Pierre Poilievre கூறினார்.

மாகாணத்தின்  கட்டுமானத் திட்டங்களை இவர்கள் தடுப்பதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய அரசின் பெருமளவு நிதி பங்களிப்பு கிடைத்தாலும் Quebec மாகாணத்தில் கட்டுமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக Pierre Poilievre குற்றச்சாட்டினார்.

Quebec City நகர முதல்வர் Bruno Marchand, Montreal நகர முதல்வர் Valérie Plante ஆகியோர் Conservative கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

Quebec மாகாணத்தின் நகர நிதியுதவியை Pierre Poilievre தவறாக புரிந்து கொண்டுள்ளதாக Montreal நகர முதல்வர் கூறினார்.

மத்திய அரசுக்கும்  மாகாணங்களுக்கு இடையே நிதியுதவி  எவ்வாறு  செயல்படுகின்றது என்பதற்கான அறியாமையின் ஒரு எடுத்துக்காட்டு இது என எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து குறித்து பிரதமர் Justin Trudeau
கூறினார்.

Related posts

அரசாங்கத்தின் மருந்தகச் சட்ட வரைவை NDP நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொடர்பான இறப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தில் முதல் தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment