தேசியம்
செய்திகள்

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி: CTC இயக்குனர் குழுவில் இருந்து துஷி ஜெயராஜ் பதவி விலகல்!

கனடிய தமிழர் பேரவையின் – CTC – இயக்குனர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளார்.

கனடிய தமிழர் பேரவையின் மூன்று இயக்குனர்களில் ஒருவரான துஷி ஜெயராஜ் தனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக சபையிடம் அனுப்பியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (05) தனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக சபையிடம் அனுப்பியுள்ளதாக துஷி ஜெயராஜ் தேசியத்திடம் உறுதிப்படுத்தினார்.

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி காரணமாக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக  அவர் கூறினார்.

உலக தமிழ் பேரவையும் – GTF – கனடிய தமிழர் பேரவையும்  – CTC –  இணைந்து முன்வைத்துள்ள இமாலய பிரகடனம் குறித்த CTC – இயக்குனரான தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என துஷி ஜெயராஜ் தெரிவித்தார்.

இமாலய பிரகடனத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி கனடிய தமிழர்கள் மத்தியில் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்த பொறுப்பற்ற நகர்வை கனடிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி, Ontario மாகாண பிரதி அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான விஜய் தணிகாசலம், Ontario மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி,  Brampton நகர முதல்வர் Patrick Brown, Toronto கல்விச் சபை உறுப்பினர் நீதன் சான், Toronto கல்விச் சபை உறுப்பினர் யாழினி ராஜகுலசிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி, CTC ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் இயக்குனருமான அபிமன்யு சிங்கம், கனடிய தமிழர் தேசிய அவையின் தலைவர் ஸ்ரீ ரஞ்சன், தமிழர் உரிமைக் குழுவின் பொதுச் செயலாளர் கற்பனா நாகேந்திரன் என பலரும் கனடாவில் கண்டித்து வருகின்றனர்.

இந்த தொடர்  கண்டங்களின் எதிரொலியாக 2024 தைப் பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்க CTC  முடிவு செய்துள்ளது.

கனடிய தமிழர் பேரவையின்  நிர்வாக,  இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என்ற வலியுறுத்தலின் மத்தியில் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது.

Related posts

ஜோர்டான் மன்னர் கனடா வருகை!

Lankathas Pathmanathan

Quebecகின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் September 1 ஆம் திகதி ஆரம்பம்!

Gaya Raja

வட அமெரிக்காவின் முதல் Volkswagen EV தொழிற்சாலை Ontarioவில்

Lankathas Pathmanathan

Leave a Comment