தேசியம்
செய்திகள்

காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கை

காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

கனடாவுடன் தொடர்புள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

இது மிகவும் கடினமான சூழ்நிலை என்பதை உறுதிப்படுத்திய Justin Trudeau, கனடிய குடிமக்கள், அவர்களது குடும்பங்களை காசாவிலிருந்து வெளியேற்றுவதற்கு தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாகவும் கூறினார்.

இதுவரை 600க்கும் மேற்பட்ட கனடிய குடிமக்கள், அல்லது அவர்களது குடும்பங்கள் காசாவிலிருந்து வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து கனடா ஆழ்ந்த கவலையில் உள்ளதாக
குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marc Miller கூறினார்.

வியாழக்கிழமை (21) முதல் கனடாவில் கட்டண விலக்கு கல்வி அனுமதி அல்லது பணி அனுமதி பத்திரங்களை பெறும் நடைமுறைகளை குடிவரவு அமைச்சர் அறிவித்தார்.

Related posts

முக்கிய அடமான அழுத்த சோதனை விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

March விடுமுறை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment