இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த கருத்தை தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட இப்போது சாதிக்க முடியும் என தான் நம்புவதாக Melanie Joly கூறினார்.
இந்த மோதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மிகவும் கடினமானது என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை (IRGC) பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் கனடிய அரசாங்கம் இணைக்க கூடும் என Melanie Joly தெரிவித்தார்