Antigua and Barbudaவில் இரண்டு கனடியர்கள் பலியானதாக கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஒரு பெண்ணும் குழந்தையும் நீரில் மூழ்கி இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இந்த உறுதிப்பாடு வெளியானது.
இவர்கள் இருவரும் கனேடிய குடிமக்கள் எனவும் சுற்றுலாப் பயணிகள் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தூதரக அதிகாரிகள் குடும்பத்திற்கு தூதரக உதவிகளையும், ஆதரவையும் வழங்குகிறார்கள் எனவும் மேலதிக விபரங்களை பெற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தனியுரிமை காரணமாக, மேலும் எந்த தகவலையும் வெளியிட முடியாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.