Scarborough Southwest தொகுதியின் இடைத் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்த இடைத் தேர்தலில் தமிழர் பார்த்தி கந்தவேள் வெற்றி பெற்றது திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக Toronto நகர அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் பார்த்தி கந்தவேள் மொத்தம் 4,641 வாக்குகளை பெற்றார்.
Kevin Rupasinghe இரண்டாவது இடத்தில் 3,854 வாக்குகளையும், Anna Sidiropoulos மூன்றாவது இடத்தில் 2,275 வாக்குகளையும் பெற்றனர்.
இருபதாவது தொகுதிக்கான இடைத் தேர்தலில் மொத்தம் 16,974 வாக்குகள் பதிவாகின
இவற்றில் மூன்று வாக்குகள் மறுக்கப்பட்டன. ஆறு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பார்த்தி கந்தவேள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக வெற்றி பெற்றவராவார்.
இவர் கடந்த நகரசபை தேர்தலில் Scarborough Southwest தொகுதியின் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Gary Crawford, கடந்த July மாதம் பதவி விலகியிருந்தார்.
Scarborough-Guildwood தொகுதியின் மாகாணசபை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இந்த மாகாணசபை இடைத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.