தேசியம்
செய்திகள்

Ontario  மாகாண Liberal கட்சியின் தலைவரானார் Bonnie Crombie!

Liberal கட்சியின் Ontario  மாகாண புதிய தலைவராக Bonnie Crombie தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று சுற்று வாக்கெடுப்புக்கு பின்னர் Ontario  மாகாண Liberal கட்சியின் புதிய தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார்.

Bonnie Crombie, மூன்று முறை Mississauga நகர முதல்வராக தெரிவானவர்.

தவிரவும் அவர் நகர சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவர்.

Ontario  மாகாண Liberal கட்சி இரண்டு தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை தொடர்ந்து மீண்டும் கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் தனது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது.

Ontario Liberal கட்சியின் 80,000 உறுப்பினர்கள்  புதிய தலைவரை November 25, 26ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுத்தார்கள்.

December மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை (02) புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் மொத்தம் நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Toronto நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith, Kingston மாகாண சபை உறுப்பினர் Ted Hsu, Ottawa நாடாளுமன்ற உறுப்பினர் Yasir Naqvi ஆகியோர் ஏனைய வேட்பாளர்களாவார்கள்.

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Del Duca கடந்த மாகாண சபை தேர்தலை தொடர்ந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

NDP மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 19 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment