தேசியம்
செய்திகள்

Saskatchewan First Nation பயணமாகும் பிரதமர்!

குழந்தைகள் நல ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு செவ்வாய்க்கிழமை பிரதமர் Saskatchewan First Nation பயணமாகிறார்.

பிரதமர் Justin Trudeau, செவ்வாய்க்கிழமை முதற்குடி சமூகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக Cowessess First Nation தெரிவித்துள்ளது. பிரதமர் Trudeau, Saskatchewan முதல்வர் Scott Moe ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

கூட்டாட்சி சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டபடி தங்கள் குழந்தை மற்றும் குடும்ப சேவைகளை கையாள உத்தேசித்துள்ளதாக சுதேச சேவைகள் கனடாவுக்கு அறிவித்த பல சுதேச குழுக்களில் இந்த First Nationனும் ஒன்றாகும்.

Saskatchewanனில் Cowessess முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

200 நாட்களுக்கு மேல் Dominican குடியரசில் தடுத்து வைக்கப்பட்ட கனடியர்கள் நாடு திரும்புகின்றனர்

Lankathas Pathmanathan

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

மகாராணியை மெய்நிகரில் சந்தித்த புதிய ஆளுநர் நாயகம்!

Gaya Raja

Leave a Comment