கனடாவின் சில பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் 35 சென்டிமீட்டர் வரை பனியும், ஏனைய இடங்களில் பனிமூட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் கனடா பல வானிலை எச்சரிக்கைகளை செவ்வாய்கிழமை வெளியிட்டது.
இந்த எச்சரிக்கை Ontarioவின் Barrie, Orillia உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்குகிறது
சில பகுதிகள் 20 முதல் 35 சென்டிமீட்டர் வரை பனி பொழிவை எதிர்கொள்ளக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
இந்த பகுதிகளில் பனிப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து சென்டிமீட்டருக்கு மேலாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது
பனி மூட்டத்துடன் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்படுகிறது
கடுமையான வீசும் காற்று காரணமாக வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு சில நேரங்களில் பார்வைத் திறன் குறையும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
Innisfil, Orangville உள்ளிட்ட பகுதிகள் இதேபோன்ற வானிலையை எதிர்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த பகுதிகளில் 10 முதல் 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது
சுற்றுச்சூழல் கனடா Ontarioவின் ஏனைய பகுதிகளுக்கும் பனிப்பொழிவு எச்சரிக்கைகளை வெளியிட்டது.
Huron, Peterborough, York உள்ளிட்ட பகுதிகளும் பனி பொழிவை எதிர்பார்க்கலாம்.
London, Simcoe பகுதிகளுக்கும் பனி பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது