December 12, 2024
தேசியம்
செய்திகள்

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள Rainbow பாலம்!

கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Rainbow பாலத்தில் வாகனம் வெடித்து சிதறிய சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது இல்லை என கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Rainbow பாலத்தில் வாகனம் வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பாலத்தின் அமெரிக்க பகுதியில் புதன்கிழமை (23) காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்ற அனுமானத்தின் கீழ் கனடிய அரசாங்க அதிகாரிகள் முதலில் செயல்பட்டனர்.

இதன் காரணமாக, பயங்கரவாத இலக்குகளில் தங்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகள் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இந்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அதிகாரிகள் Rainbow பாலம் உட்பட மூன்று Niagara எல்லைக் கடவைகளை மூடினர்.

எனினும், புதன் மாலை Whirlpool பாலம், Peace பாலம், Queenston-Lewiston பாலம் ஆகியவை போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்படுவதாக Ontario மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

ஆனாலும் Rainbow பாலம் வியாழக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Ontarioவில் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என OPP ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மரணங்கள்!

Gaya Raja

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment