ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் பிரதமர் Justin Trudeauவை Newfoundlandடில் சந்திக்கின்றனர்.
Newfoundland மாகாணத்தின் St. John’s நகரில் இந்த சந்திப்பு வியாழக்கிழமையும் (23), வெள்ளிக்கிழமையும் (24) நடைபெறுகிறது
கனடா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உச்சி மாநாடு St. John’s நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் Justin Trudeau, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
காலநிலை மாற்றம், வர்த்தகம், உக்ரைன், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் போன்ற விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் விவாதிப்பார்கள்.