தேசியம்
செய்திகள்

Torontoவில் வாகனம் மோதியதில் தமிழர் மரணம்

Toronto மத்திய பகுதியில் வாகனம் மோதியதில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.

Dufferin Street and Eglinton Avenue மேற்கு பகுதியில் திங்கட்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர் 53 வயதான தெய்வரூபன் தெய்வேந்திரன் என குடும்பத்தினர் அடையாளப்படுத்தினர்.

இவர் நாடு கடந்த தமிழீழ அரசவையின் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.

இவர் வீதியைக் கடக்க முற்பட்ட போது, வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தை அடுத்து வாகன சாரதி சம்பவ இடத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவாகுமா என்பது இதுவரை தெரியவில்லை.

Related posts

B.C. மாகாண தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தலைவர்கள் வெற்றி

Lankathas Pathmanathan

NATO செலவின இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா

வரவு செலவு திட்டம் குறித்து Conservative தலைவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment