தேசியம்
செய்திகள்

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பாலஸ்தீனிய ஆதரவு போராட்டம் Torontoவில்!

Toronto நகரில் நடைபெற்ற  பாலஸ்தீனிய ஆதரவு போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை பிற்பகல் Toronto நகரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.

பாலஸ்தீனத்திற்கான Toronto என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் Nathan Phillips சதுக்கத்தில் ஆரம்பமானது.

இந்த ஆர்ப்பாட்டத்துடன் Scarborough Town Centreரிலிருந்து ஆரம்பித்த வாகனப் பேரணியில் கலந்து கொண்டவர்களும் இணைந்து கொண்டனர்.

காசா பகுதியில் நடந்து வரும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் அழைப்பு விடுத்தனர்.

அங்கு ஒரு மனிதாபிமான நெருக்கடி நிகழ்வதை சுட்டிக் காட்டும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தினர்.

இந்த வார இறுதியில் நாடளாவிய ரீதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பல ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

Related posts

Canada Post ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்படுவார்கள்?

Lankathas Pathmanathan

தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை: Trudeau

Gaya Raja

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: Jennifer McKelvie உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment