Calgary நகருக்கு வடக்கே பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உட்பட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து திங்கட்கிழமை காலை நிகழ்ந்ததாக RCMP தெரிவித்தது.
இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஆனாலும் சிலர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆறு பேர் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுக்கு உள்ளாகினர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தின் போது ஒன்பது மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் பேருந்தில் இருந்ததாக RCMP தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.