NDP கட்சியில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Sarah Jama நீக்கப்பட்டார்.
Sarah Jama முன்வைத்த, இஸ்ரேல்-காசா கருத்துக்கள் தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த முடிவை எடுத்ததாக NDP தலைவி Marit Stiles கூறினார்
அதேவேளை Hamilton-Centre தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் Sarah Jamaவின் இஸ்ரேல்-காசா யுத்தம் குறித்த கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டது.
இது குறித்த ஒரு சட்ட மூலத்திற்கு ஆதரவாக Doug Ford தலைமையிலான அரசாங்கம் வாக்களித்தது.
இந்த சட்ட மூலம் 63க்கு 23 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது.