Caribbean பிராந்தியத்தின் தலைவர்களை கனடிய பிரதமர் Justin Trudeau சந்திக்கின்றார்
இரண்டு நாட்கள் Ottawaவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது
பன்னிரெண்டுக்கு அதிகமான Caribbean பிராந்திய நாடுகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.
கனடாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக வர்த்தகம், காலநிலை, Haiti நெருக்கடி குறித்து கலந்துரையாடப்படவுள்ளது
Haitian பிரதமர் Ariel Henry, Barbados பிரதமர் Mia Mottley, Bahamas, Belize, Dominica, Jamaica, Saint Kitts and Nevis, Saint Lucia, Saint Vincent and the Grenadines, Trinidad and Tobago பிரதமர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
தவிரவும் Guyana, Suriname, நாடுகளின் ஜனாதிபதிகள், Grenadaவின் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.
Caribbean பிராந்தியம் 15 நாடுகளையும் ஐந்து வெளிநாட்டு பிரதேசங்களையும் உள்ளடக்கியது.
இது Bahamas முதல் Trinidad and Tobago வரை பரவியுள்ளது.
ஆனால் கியூபாவை இது உள்ளடக்கவில்லை.