காசா நகர மருத்துவமனை மீதான தாக்குதலை கனடிய பிரதமர் Justin Trudeau கண்டித்துள்ளார்.
காசா நகர மருத்துவமனைகுண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இது “கொடூரமானது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என கனடிய பிரதமர் கூறினார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என Justin Trudeau செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காசாவில் எதிர்கொள்ளப்படும் மனிதாபிமான நெருக்கடியின் மோசமான நிலையை சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen விளக்கினார்.
தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஆறு கனடியர்கள் பலியாகியுள்ளனர்.
காணாமல் போன இரண்டு கனடியர்களை கண்டுபிடிக்க முயற்சிகள் தொடர்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கூறினார்.