December 12, 2024
தேசியம்
செய்திகள்

பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய ஹமாசுக்கு கனடிய பிரதமர் அழைப்பு

இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கனடிய பிரதமர் Justin Trudeau ஹமாசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிராந்திய போர் அதன் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் காசாவுக்குள் தடையின்றி மனிதாபிமான உதவி சென்றடைவதை உறுதிப்படுத்தவும் அவர் கோரினார்.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் Justin Trudeau  திங்கட்கிழமை (16) உரையாற்றினார்.

இஸ்ரேலில் இருந்து கனடியர்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்வதாகவும் பிரதமர் தனதுரையில் கூறினார்.

October மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் முதன் முறையாக கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பித்த நிலையில் Justin Trudeauவின் இந்த கருத்துக்கள் வெளியாகின.

இந்த அமர்வின் போது எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

Conservative தலைவர் Pierre Poilievre, NDP வெளியுறவு விமர்சகர் Heather McPherson உள்ளிட்ட பலரும் நாடாளுமன்ற அமர்வில் தமது கட்சியின் சார்பில் கருத்து தெரிவித்தனர்.

Related posts

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Gaya Raja

கனடாவின் emission அளவுகள் 2021இல் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment