தேசியம்
செய்திகள்

கனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனடிய பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த அறிவித்தலை வெளியிட்டார். Delta மாறுபாடு இப்போது அனைத்து மாகாணங்களிலும், குறைந்தபட்சம் ஒரு பிரதேசத்திலும் பதிவாகியுள்ளதாக Tam கூறினார்.

இந்த வாரம் கனடாவில் Delta மாறுபாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை 66 சதவீதம் உயர்ந்தது. வெள்ளிக்கிழமை வரை  2,000க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட Delta மாறுபாட்டின் தொற்றுகள் கனடாவில் பதிவாகியுள்ளன.

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 1,187 ஆக இருந்தது என கனடிய பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட Blue Jays அணி

Lankathas Pathmanathan

கனடாவில் முதல் BA.2.86 COVID மாறுபாடு பதிவு!

Lankathas Pathmanathan

விரைவில் தேர்தல்? – இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment