December 12, 2024
தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய $10 மில்லியன் உதவி வழங்கும் கனடா

இஸ்ரேல், காசாவில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய 10 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா வழங்குகிறது.

பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (12) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த உதவி வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

அனுபவம் வாய்ந்த, நம்பகமான மனிதாபிமான பங்காளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen தெரிவித்தார்.

தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியிருக்கும் பயங்கரமான பேரழிவின் தாக்கம் குறித்து Trudeau கவலை தெரிவித்தார்.

ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என மீண்டும் வலியுறுத்திய கனடிய பிரதமர், அது இஸ்ரேலை ஆக்கிரமிக்கத் தேர்ந்தெடுத்துள்ளது என கூறினார்.

ஹமாஸ் பாலஸ்தீன மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என பிரதமர் Justin Trudeau குறிப்பிட்டார்.

Related posts

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடா எதிர்கொள்கிறது

மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது – மூவரை தேடிவரும் OPP

Lankathas Pathmanathan

Leave a Comment