இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்களுடன் முதலாவது விமானம் Tel Aviv நகரில் உள்ள Ben Gurion விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (12) பயணித்தது.
கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair வியாழன் காலை இந்த தகவலை அறிவித்தார்.
முதல் கனேடிய விமானம் இஸ்ரேலில் இருந்து 130 பயணிகளுடன் புறப்பட்டது.
கனேடிய குடிமக்கள், அவர்களது குடும்பத்தினரை இஸ்ரேலில் இருந்து வெளியேற்றும் முதல் கனேடிய ஆயுதப்படை விமானம் 130 பயணிகளுடன் புறப்பட்டது.
இந்த கனேடிய ஆயுதப்படை விமானம் Tel Avivவில் இருந்து Athensசுக்கு பயணிக்கிறது
அங்கிருந்து, Air கனடா விமானத்தில் அவர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இந்த நிலையில் இஸ்ரேல், மேற்குக் கரை, காசாவில் உள்ள கனேடியர்களுக்கு உதவ உழைத்து வருவதாக அமைச்சர் Bill Blair கூறினார்.
இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடிய குடிமக்கள், அவர்களின் குடும்பங்களை வெளியேற்றும் நகர்வு விரைவில் ஆரம்பிக்கும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (11) உறுதிப்படுத்தினார்.
நாளாந்தம் மூன்று விமானங்கள், ஒரு விமானத்திற்கு அதிகபட்சம் 150 பணியாளர்கள் என்ற தற்காலிக வெளியேற்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.