தேசியம்
செய்திகள்

Pickering சூதாட்ட மைய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Pickering நகர சூதாட்ட மையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புக் காவலர் உயிரிழந்தார்.

திங்கட்கிழமை (09) அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர் 34 வயதான Michael Ferdinand என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சில ஆண்களையும் பெண்களையும் தேடி வருவதாக Durham பிராந்திய காவல்துறையினர் கூறினர்.

மறு அறிவித்தல் வரை Pickering சூதாட்ட மையம் “தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து Pickering சூதாட்ட மையம் விவரம் எதையும் வெளியிடவில்லை.

Related posts

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment