Toronto நகர முன்னாள் முதல்வர் John Toryயின் பணியாளருடனான உறவு, நகரின் நடத்தை விதிகளை மீறியது என நேர்மை ஆணையர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (05) வெளியிடப்பட்ட 122 பக்க அறிக்கையில், நேர்மை ஆணையர் Jonathan Batty இந்த முடிவை அறிவித்தார்
John Tory தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியருடன் 2020 கோடை காலத்தில் உறவை ஆரம்பித்தார்.
நேர்மை ஆணையர் அறிக்கையில் அவரது பெயர் “Ms. A” என குறிப்பிடப்பட்டுள்ளது
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இதன் காரணமாக John Tory பதவி விலகினார்.
COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory அறிவித்தார்.