தேசியம்
செய்திகள்

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை கெளரவித்ததற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு

Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கெளரவித்ததற்கு கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் Naziகளுடன் இணைந்து போராடிய ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.

Peter Savaryn என்பவருக்கு Order of Canada நியமனம் ஆளுநர் நாயகம் அலுவலகத்தால் 1987ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த நியமனத்திற்காக கனடியர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என ஆளுநர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Peter Savaryn இரண்டாம் உலகப் போரில் Naziகளுடன் இணைந்து போரிட்டவர் என கூறப்படுகிறது.

இவருடன் இணைந்து Naziகளுக்காக போரிட்ட ஒருவரையே அண்மையில் கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

இந்த அங்கீகாரத்திற்காக கடந்த வாரம் பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரினார்.

தவிரவும் இதற்கு பொறுப்பேற்று நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் கனடாவின்பங்கு குறித்து  விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம்COVID தடுப்பூசிகளை பெறலாம்

Gaya Raja

Leave a Comment