தேசியம்
செய்திகள்

சபாநாயகர் பதவி விலக அதிகரிக்கும் வலியுறுத்தல்!

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு கனடிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் பின்னணியில் இந்த பதவி விலகல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கடந்த வெள்ளிக்கிழமை (22) கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது, கனடிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

இந்த உரையின் போது  Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

இதன் பின்னணியில் சபாநாயகர் Anthony Rota பதவி விலக வேண்டும் என Liberal அமைச்சர்கள், Conservative தலைவர் Pierre Poilievre, புதிய ஜனநாயக கட்சி,  Bloc Quebecois பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளன.

இந்த தவறுக்கு முழு பொறுப்பேற்கிறேன் என Anthony Rota  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திங்கட்கிழமை (25) மன்னிப்பு கோரினார்.

இந்த விடயம் குறித்து உரையாட சபாநாயகர் Anthony Rota செவ்வாய்க்கிழமை (26) அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்

Lankathas Pathmanathan

B.C. மாகாணசபை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக ஒரு வாரங்கள் எடுக்கும்?

Lankathas Pathmanathan

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment