கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் மாகாண முதல்வராக தெரிவாகும் சந்தர்ப்பம் Manitoba மாகாணத்தில் தோன்றியுள்ளது.
Manitoba மாகாணத்தில் தேர்தல் October மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் மாகாண முதல்வராக Wab Kinew தெரிவாவார்.
தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் முதல் தடவையாக முதல்வராக தெரிவாகும் நிலை தோன்றியுள்ளது.