தேசியம்
செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தமிழர் கைது

Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டார்.

இவர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (21)  Brampton நகரில் Bovaird Drive & Mountainash Road பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

13 வயது சிறுமி ஒரு கடை தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை சந்தேக நபர்  அணுகியுள்ளார்.

அவர் தன்னை ஒரு காவல்துறை  அதிகாரி என கூறி, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அனுஷன் ஜெயக்குமார்,  நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார்.

இவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ள Peel பிராந்திய காவல்துறையினர் அவரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

2024 Paris Olympics: கனடா வெற்றி பெற்ற 26ஆவது பதக்கம்

Lankathas Pathmanathan

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Hockey கனடாவுக்கு நிதியுதவியை நிறுத்த பெரு நிறுவனங்கள் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment