தேசியம்
செய்திகள்

Ontario மாகாண அமைச்சர் பதவி விலகல்

Ontario மாகாண பொது, வணிக சேவை வழங்கல் அமைச்சர் (Minister of public and business service) தனது அமைச்சரவை பதவியில் இருந்து விலகினார்.

Kaleed Rasheed தனது அமைச்சரவை பதவியில் இருந்து விலகியதை முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவின் Las Vegas நகரத்திற்கு மேற்கொண்ட பயணம் குறித்த சர்ச்சையின் மத்தியில் அவர் பதவி விலகினார்.

Mississauga East-Cooksville தொகுதியின் மாகாண சபை உறுப்பினரான Kaleed Rasheed, ஆளும் Progressive Conservative கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் மாகாண சபையில் அவர் சுயேச்சை உறுப்பினராக செயல்படவுள்ளார்.

Greenbelt குறித்த சர்ச்சையை அடுத்து பதவி விலகிய இரண்டாவது அமைச்சர் இவராவார்.

எதிர்வரும் நாட்களில் புதிய பொது, வணிக சேவை வழங்கல் அமைச்சர் நியமிக்கப்படுவார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

Related posts

கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Lankathas Pathmanathan

Air India விமான சேவைக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment