பாடசாலைகளில் LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேரணிகள் கனடா முழுவதும் நடைபெற்றன.
கனடா முழுவதும் உள்ள நகரங்களில் போராட்டங்கள் புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலைகளில் பாலின வேறுபாட்டை கற்பிக்க அனுமதிக்கும் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.
பாலின அடையாளம் குறித்த பாடசாலை கொள்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டக்காரர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.
“1MillionMarch4Children” என்ற குழுவால் பாடசாலைகளில் பாலின வேறுபாட்டை கற்பிக்க அனுமதிக்கும் கொள்கைகள் இந்தப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன
.
Ottawaவில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.