December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

கனடாவிற்கான பயண அறிவுறுத்தல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது.

கனடாவுக்கு பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறு இந்தியா தனது குடிமக்களுக்கு புதன்கிழமை (20) அறிவுறுத்தியுள்ளது

புதுதில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டது.

அதிகரித்து வரும் இந்திய-விரோத நடவடிக்கைகள் காரணமாக தனது நாட்டவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அந்த பயண அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் இந்திய அரசின் முகவர்கள் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதனால் விரிசலடைந்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு மத்தியில் இந்த பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

Related posts

பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது

Lankathas Pathmanathan

ரஷ்ய ஏவுகணை தாக்குதல் குறித்து அவதானித்து வருகிறோம்: கனடிய பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 8ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment