கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்திய அரசின் முகவர்கள் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (18) நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இதனை ஒரு மிகவும் தீவிரமான விடயம் என Justin Trudeau குறிப்பிட்டார்
“இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவை கனடாவின் இறையாண்மைக்கு மூர்க்கத்தனமான அவமானத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன” என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.
Hardeep Singh Nijjar கொலை தொடர்பான விசாரணையில் கனடிய புலனாய்வாளர்களுடன் இந்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை Pierre Poilievre எதிரொலித்தார்.
இந்த “அதிர்ச்சியூட்டும்” செய்தி “கனேடியர்களுக்கு ஆழமானதும் பேரழிவு தரும் தாக்கங்களை ஏற்படுத்தும்” என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.