தேசியம்
செய்திகள்

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைப்புகள் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்திய அரசின் முகவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடிய பிரதமர் கூறினார்

திங்கட்கிழமை இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை ஒரு மிகவும் தீவிரமான விடயம் என குறிப்பிட்டார்

கடந்த சில வாரங்களாக, கனேடிய பாதுகாப்பு அமைப்புகள் , இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கும் கனேடிய குடிமகன் Hardeep Singh Nijjar  கொல்லப்பட்டதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரித்து வருவதாக தனது உரையில் Justin Trudeau கூறினார்.

Related posts

பிரதமரின் சிறப்பு ஆலோசகரானார் கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

Lankathas Pathmanathan

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment