December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான முதலாவது விவாதம்

Ontario மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ள வேட்பாளர்களின் முதலாவது அதிகாரப்பூர்வ விவாதம் ஆரம்பமானது.

Thunder Bay, Ontarioவில் வியாழக்கிழமை இந்த விவாதம் விவாதம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith, நாடாளுமன்ற உறுப்பினர் Yasir Naqvi, மாகாணசபை உறுப்பினர் Ted Hsu, மாகாண சபை உறுப்பினர் Adil Shamji, Mississauga நகர முதல்வர் Bonnie Crombie ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

இந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ள முன்னணி வேட்பாளராக கருதப்படும் Bonnie Crombieயை இலக்காக கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் Liberal கட்சி மேலும் நான்கு விவாதங்களை நடத்த உள்ளது.

Stratford, Toronto, Ottawa, Brampton ஆகிய நகரங்களில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

Liberal கட்சி உறுப்பினர்கள் November 25ஆம் திகதி வார இறுதியில் தங்கள் தரவரிசை வாக்குகளை கட்சியின் அடுத்த தலைவருக்காக பதிவு செய்வார்கள்.

Liberal கட்சியின் அடுத்த தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார்.

Related posts

இரண்டு வருடங்களின் பின்னர் கனடாவில் Blue Jays!!

Gaya Raja

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவில் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment