February 23, 2025
தேசியம்
செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட Moderna தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல்

புதுப்பிக்கப்பட்ட Moderna XBB.1.5 COVID தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

Modernaவின் Spikevax XBB.1.5 COVID தடுப்பூசியை ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கனடியர்களுக்கும் பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

Health கனடா, கனடாவின் பொது சுகாதார நிறுவனம், நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு ஆகியவற்றின் அதிகாரிகள் செவ்வாய்கிழமை (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்த ஒப்புதல் விவரங்களை அறிவித்தனர்.

பாதுகாப்பு, செயல்திறன், தரம் ஆகியவற்றிற்கான ஒரு சுயாதீனமான, முழுமையான அறிவியல் ஆய்வுக்குப் பின்னர் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாகாணமும் பிராந்தியமும் COVID, காய்ச்சல் தடுப்பூசி குறித்த விவரங்களை வழங்கும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.

Health கனடா தனது Omicron XBB.1.5 தடுப்பூசியை ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதற்கு Pfizer-BioNTech இன் சமர்ப்பிப்பை மதிப்பாய்வு செய்கிறது.

Omicron XBB.1.5 தடுப்பூசியை ஆறு மாதங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதற்கு Pfizer-BioNTech இன் சமர்ப்பிப்பை Health கனடா மதிப்பாய்வு செய்கிறது.

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Omicron XBB.1.5 தடுப்பூசிக்காக Novavax சமர்ப்பிப்பையும்  Health கனடா மதிப்பாய்வு செய்கிறது.

Related posts

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment