February 23, 2025
தேசியம்
செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் கண்டனம்

இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

G20 மாநாட்டில் கலந்து கொள்ள புதுடில்லி சென்ற கனடிய பிரதமர் Justin Trudeauவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த உரையாடலின் போது கனடாவில் இந்தியாவுக்கு எதிராக தொடரும் சீக்கியர்களின் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

கனடாவில் முன்னெடுக்கப்படும் சீக்கிய எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து இந்திய அரசாங்கம் நீண்டகாலமாக கண்டனம் தெரிவித்து வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது  பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் காட்சியை அணிவகுப்பொன்றில் அனுமதித்ததற்கு கடந்த June மாதம் கனடாவை இந்தியா விமர்சித்திருந்தது.

கனடா எப்போதும் கருத்துச் சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கும் என புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கனடிய பிரதமர் கூறினார்.

இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையிலான உறவு பதட்டமாக உள்ளது.

இந்தியாவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை கனடா இந்த மாதம் இடைநிறுத்தியது.

G20 மாநாட்டின் போது பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்திய இந்திய பிரதமர், கனடிய பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

March 22nd 2020 lகனடாவில் இந்த வாரத்தில் l Canada This Week

thesiyam

கனடாவில் அதிகரிக்கும் COVID தொற்றின் புதிய திரிபு!

Gaya Raja

GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

Leave a Comment