December 12, 2024
தேசியம்
செய்திகள்

வாகனத் திருட்டு குற்றத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 6 பேர் கைது

வாகனத் திருட்டு குற்றத்திற்கு இரண்டு தமிழர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Peel பிராந்திய காவல்துறையினர் இந்த கைதிகளை மேற்கொண்டனர்.

இதில் 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள இரண்டு திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Toronto பெரும் பாகம் முழுவதும் பரந்த இந்த வாகன திருட்டு குற்றம் தொடர்பாக ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“Project Vinny” என பெயரிடப்பட்ட ஒரு ஆண்டு கால விசாரணையின் முடிவுகளை Peel பிராந்திய காவல்துறையினர் வியாழக்கிழமை அறிவித்தனர்.

கடந்த ஆண்டு August மாதம் Brampton நகரில் Range Rover வாகனம் திருடப்பட்டபோது இந்த விசாரணை ஆரம்பமானதாக Peel பிராந்திய காவல்துறையின் துணை தலைவர் Marc Andrews கூறினார்.

Peel, York பிராந்தியங்களில் இதே குழுவினால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் இதே போன்ற பிற வகையான வாகனத் திருட்டுகளை தமது விசாரணைகளில் புலனாய்வாளர்கள் தொடர்புபடுத்தினர்.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு ;

32 வயதான கஜன் கருணாநிதி,
25 வயதான ஹாபிஷன் சிவசேகரன்,
23 வயதான Riaz Mohamed,
27 வயதான Robert Ramnarine,
29 வயதான Van George Snjagly,
36 வயதான Oneil Ricketts.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மொத்தம் 42 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணையுடன் தொடர்புடைய மேலும் இருவர் காவல்துறையினரால் தேடப்படுகின்றனர்.

39 வயதான Calvin Peacock, ஒரு அடையாளம் அடையாளம் காணப்படாத ஆண் ஆகியோரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

சூடானில் இருந்து கனடியர்களை வெளியேற்றவுள்ள இராணுவத்தினர்?

Lankathas Pathmanathan

புதன்கிழமை ஆரம்பமாகும் Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம்

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது!

Lankathas Pathmanathan

Leave a Comment