November 16, 2025
தேசியம்
செய்திகள்

Mexico துப்பாக்கிச் சூட்டில் கனடிய பெண் மரணம்!

Mexico துப்பாக்கிச் சூட்டில் பலியான கனடிய பெண் அடையாளம் காணப்பட்டார்.

Queretaroவில் கொல்லப்பட்டவர் கனடியரான Gabriele Schart என Mexico காவல்துறையினர் செவ்வாய்கிழமை உறுதிப்படுத்தினர்.

Mexicoவில் வசிக்கும் கனடியரான இவர் March 16 நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

Mexicoவின் Zipoliteஇல் பத்து ஆண்டுகளும் மேல் வசித்து வந்த இவர் தனது வயதான தாயை கவனிப்பதற்காக கனடா திரும்பும் வழியில் மரணித்ததாக அவரது புதல்வர் தெரிவித்தார்.

மளிகை கடை ஒன்றில் நின்றிருந்த இவரும், நண்பியும் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

இதில் Gabriele Schart சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.

அவரது தோழி கையில் காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Mexicoவில் கனடியர் ஒருவர் உயிரிழந்ததை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தனிநபர் உரிமை காரணமாக, மேலதிக தகவல்களை வெளியிட அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

மேற்கு Manitoba கத்தோலிக்க தேவாலயம் பகுதியில் அகழ்வாராய்ச்சி

Lankathas Pathmanathan

விடுப்பு எடுப்பதாக அறிவித்த மாகாண அமைச்சர்!

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டமூல வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் த‌ள்ளுபடி செய்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment