அடையாளம் காணப்படாத 93 கல்லறைகளை கண்டுபிடித்துள்ளதாக Saskatchewan முதற்குடி சமூகம் ஒன்று கூறுகிறது.
79 சந்தேகத்திற்கிடமான குழந்தைகளின் கல்லறைகளும் 14 சிசுக்களின் கல்லறைகளும் கண்டுபிடித்துள்ளதாக Saskatchewan முதற்குடி சமூகம் தெரிவித்தது.
English River முதற்குடி சமூகத்தின் தலைவர் Jenny Wolverine செவ்வாய்க்கிழமை (29) Saskatoon நகரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
அங்கு மேலும் கல்லறைகள் இருக்கலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்.
முன்னாள் Beauval Indian முதற்குடியினர் பாடசாலை அமைந்திருந்த இடத்தில் English River முதற்குடி சமூகம், August 2021 முதல் தரையில் ஊடுருவும் கருவிகளை பயன்படுத்தி தேடுதல் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் தொடரும் தமது தேடுதல் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு English River முதற்குடி சமூக தலைவர் மத்திய, மாகாண அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.