Ontario மாகாணத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத பெண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இவர் Roseneath நகரில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்காக Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வியாழக்கிழமை (24) அதிகாலை இந்த Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கை மூன்று மாத குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் காலை 7 மணியளவில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழந்தை காணாமல் போன விசாரணையில் அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக OPP தெரிவித்துள்ளது.