West Edmonton வணிக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.
திங்கட்கிழமை (21) இரவு 7:40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
காயமடைந்த மூன்று ஆண்கள் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் வயது குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நீண்ட நேரம் வணிக வளாகம் காவல்துறையினரால் மூடப்பட்டிருந்தது.
காவல்துறையினரின் விசாரணையின் பின்னர், இரவு 10 மணியளவில் வணிக வளாகம் மீண்டும் திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில் எவரும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து காவல்துறையினர் தகவல் எதனையும் வெளியிடவில்லை.