தேசியம்
செய்திகள்

$15 பில்லியன் செலவைக் குறைக்குமாறு அமைச்சரவைக்கு கடிதம்

15 பில்லியன் டொலர் செலவைக் குறைக்குமாறு Justin Trudeau அமைச்சரவையிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அடங்கிய ஒரு கடிதம் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருவூல வாரிய தலைவர் அனிதா ஆனந்த் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சுகளின் வரவு செலவுத் திட்டங்களில் குறைக்க வேண்டிய பகுதிகளைக் கண்டறிய October 2ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

2028ஆம் ஆண்டுக்குள் செலவினத்தை 14.1 பில்லியன் டொலர்களாக குறைக்கவும், அதை தொடர்ந்த ஆண்டுகளில் செலவினத்தை 4.1 பில்லியன் டொலர்களாக குறைக்கவும் கோரப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலை இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என அனிதா ஆனந்த் கூறினார்.

அடுத்த வாரம் Prince Edward தீவில் சந்திக்கும் Liberal அமைச்சரவை, இந்த விடயம் உட்பட்ட பல விடயங்களை விவாதிக்கும் என கருவூல வாரிய தலைவர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freelandடின் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒட்டுமொத்த 15.4 பில்லியன் டொலர் சேமிப்பு உறுதிமொழி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தடுப்பூசி போட்ட மாணவர்களுக்கும் – போடாத மாணவர்களுக்கும் தனி விதிகள் இல்லை!

Gaya Raja

தமிழ் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதல்ல! 

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் அபாயங்களை விட அதிகமானவை – Health கனடா உறுதி

Gaya Raja

Leave a Comment