தேசியம்
செய்திகள்

COVID அதிகரிப்பு குறித்து கண்காணிக்கும் சுகாதார அமைச்சர்

COVID தொற்றின் அதிகரிப்பு குறித்து கண்காணித்து வருவதாக கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஆரம்ப அறிகுறிகள் தொற்று அதிகரித்து வருவதாக கூறும் நிலையில் புதிய சுகாதார அமைச்சர் Mark Holland இந்த கருத்தை தெரிவித்தார்.

கனடாவின் பொது சுகாதார முகமையின் சமீபத்திய தரவு நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.

இந்த நிலை குறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆனாலும் ஒட்டுமொத்த COVID தொற்றின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்திய தரவுகள் குறித்து கவலையடையவில்லை என கனடாவின் துணைத் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Howard Njoo தெரிவித்தார்.

Related posts

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan

தமிழர் சமூக நிலைய அமைவிடத்திற்கு Toronto மாநகர சபையின் ஏகோபித்த அங்கீகாரம்

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை அதிகரிக்கவுள்ள கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment